மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ள இந்தியா

233 0

மலையக பாடசாலைகளுக்கு உதவும் இந்திய அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளது. 

மேலும், மலையகத்தில் 15 பாடசாலைகளை இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதியை இந்தியா வழங்கி உள்ளதாக கண்டி உதவி இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது எனவும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியா மலையக அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற உடன் இந்தியாவின் உதவியோடு, மலையத்தில் 30 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கோரிக்கை விடுத்தேன்.

அதில் தற்போது முதற்கட்டமாக 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய உள்ளதாக கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் இராதா வெங்கட்ராமன் என்னிடம் கூறினார். அந்தவகையில் இவருக்கும் இந்திய அரசிற்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன், என்றார். இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் இராதா வெங்கட்ராமன்¸ கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment