பதுளையில் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி 16 வயது மாணவன் மரணம்

247 0

டெங்கு தொற்றுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 16 வயது மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த மாணவனின் சகோதரியும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1 வருட காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 72ஆயிரம் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், டெங்கு தொற்றுக்கு உள்ளாகிய 213 பேர் உயிரிழந்துள்ளனதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment