சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை – சந்திரிக்காவின் நல்லிணக்க அலுவலகம் வரவேற்பு

438 0

f9b77f28f9baa342714f61b3c3c195f2b24d7d18eac42c2866b9eee4ce6e50d6-720x480இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிண்ண அலுவலகம் வரவேற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான இந்த அலுவலகம், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவென்று தெரிவித்துள்ள பரிந்துரைகள் வரவேற்கக்கூடியவை என்று அறிக்கை ஒன்றின்மூலம் குறிப்பிட்டுள்ளது.
நிலையில்லாத வாழ்;க்கை என்ற தலைப்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைப்படுத்தல், நியாயமான நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலேயே நல்லிணக்க அலுவலகம் உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் காணாமல் போனோர் விடயம் தொடர்பாக உரிய அமைச்சுக்கள், நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வைக்காணும் வகையில் தமது அலுவலகம், செயற்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையில், தென்னிலங்கையில் காணாமல் போன படையினரின் 5100 குடும்பங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் தமது அலுவலகம் கவனம் செலுத்திவருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தினால் நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன அலுவலக பொறிமுறை மூலம், குறித்த காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அலுவலகம் குறி;ப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கு பிரசன்னமின்மை சான்றிதழ்களை வழங்கும் பொறிமுறை தொடர்பான  சட்டமூலம் இந்த மாத இறுதியில் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அலுவலகம் தெரிவித்துள்ளது.