ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்றுள்ள மொரொக்கோவின் குத்துச்சண்டை வீரர் ஒருவரை பிரேசிலின் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்
ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக தாக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
22 வயதான ர்யளளயn ளுயயனய என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார்.
இவர், ஒலிம்பிக்கில் இன்று சனிக்கிழமை இடம்பெறவிருந்த போட்டியில் பங்கேற்கவிருந்தார்.
எனினும் பெண்களை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட அவரை 14 நாட்கள் தடுத்து வைக்குமாறு பிரேசிலின் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டநிலையில் அவரால் போட்டியில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது