தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பாரிய பின்னடைவு

324 0

voting1-650x433தென்னாபிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பாரிய தேர்தல் பின்னடைவை சந்தித்துள்ளது.
அந்த  நாட்டில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட இந்தக்கட்சி, தமது அதிகார நிலையை இழந்துள்ளது.
96 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி தமது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஜொஹான்ஸ்பேர்க்கில் கடும் போட்டி நிலவுகிறது.
எனினும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இன்னமும் 54 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.