வடகொரிய விவாகரம் குறித்து ஜப்பான், சீனா தலைவர்களுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் டிரம்ப்

414 0

சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி ஏவுகணைகளை செலுத்தி வரும் வடகொரியா குறித்து ஜப்பான் மற்றும் சீனா தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வடகொரியா நாடானது ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி தொடர்ந்து ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. இதனால், கொரிய தீபகற்ப பகுதி மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சம் நிலவுகிறது. இதனால், வடகொரியா மீது பல்வேறு நாடுகளும் பலதரப்பட்ட தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், வட கொரியாவின் செயல்பாடுகள் குறித்தும், அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எந்த மாதிரியான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை போனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும், ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கூட இருக்கும் ஜி-20 நாடுகளின் மாநாடு குறித்தும் இருநாட்டு தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a comment