இந்திய அஸாமில் பிரிவினைவாதிகளால் 13பேர் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
அஸாமின் வடமேற்கு Kokrajhar நகரப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியிலும் உந்துருளியிலும் வந்தவர்களே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் கைக்குண்டு வீச்சையும் நடத்தியுள்ளனர்.
இதேவேளை படையினரின் தாக்குதலில் தாக்குதல்தாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அஸாமின் காவல்துறை தலைமையதிகாரி முகேஸ் சாஹி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்தவொரு அமைப்பும் உரிமைக்கோரவில்லை.
எனினும் தடைசெய்யப்பட்ட தேசிய ஜனநாயக முன்னணியே இந்த தாக்குதலுக்கு பொறுப்பு என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த அமைப்பு அஸாமின் தனிநாடு கோரி போராடி வருகிறது.
இந்தநிலையில் இந்த தாக்குதல் அஸாமின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று அந்த மாநில நிதியமைச்சர் Himanta Biswa Sarma தெரிவித்துள்ளார்.