இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 3.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரகசிய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் இந்த போலிய நாணயத் தாள்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடங்களுடன் இந்த வருடத்தில் போலி நாணய அச்சடிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் போலி நாணயங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.