வடக்கு மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கரன்ஜித்சிங் சாந்து தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மக்களின் வாழ்வாதாரம் அழிவடைந்தன.
இதனால் இந்தியாவின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள இந்தியா அரசு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கரன்ஜித்சிங் சாந்து தெரிவித்துள்ளார்.