கூட்டு எதிர்க் கட்சியின் மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத் தொடரின் அடுத்த முக்கிய கூட்டம் நாளை மறுதினம் (03) திருகோணமலை நகரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருகோணமலை துறைமுகம் உட்பட அரச சொத்துக்களை விற்பனை செய்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து வருதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, டெங்கு நோய் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இக்கூட்டம் நடைபெறவுள்ளது.