2017 ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற தொடரூந்து விபத்துகளில் 237 பேர் உயிரிழந்துள்ளதாக தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துளார்.
அவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தொடரூந்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தொடரூந்து பாதையில் நடந்து செல்வதனூடாகவும் விபத்துகள் நேர்ந்துள்ளன.
இந்த நிலையில், தொடரூந்து பாதையில் நடந்துசென்றமை தொடர்பாக சுமார் 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செல்ஃபி எனப்படும் சுயப்படம் எடுத்தல் மற்றும் கைத்தொலைபேசி பாவனை என்பனவற்றினூடாகவும், தொடரூந்து விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.