இரணைதீவு தெற்கு கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடைசெய்யப்பட்ட 11 வலைகள், துடுப்புகள் 11, முகமூடி 11, ஜீ.பி.எஸ் கருவிகள் இரண்டு மற்றும் 29 கிலோகிராம் மீன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பொருட்களை நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.