முன்னணி பாடசாலைகளுக்கு இருந்துவரும் போட்டிக்குத் தீர்வுகாண, கிராமபுற பாடசாலைகளை சகல வசதிகளுடனும் முன்னேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த கொள்கைக்கேற்ப செயற்பட்டுவரும் தற்போதைய அரசாங்கம் கிராமப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு பல விரிவான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
நகரத்திலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை என்ற கருத்தின் காரணமாக பெற்றோர்களிடையே போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றி நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.