உமா ஓய அபிவிருத்தி செயற்றிட்ட கலந்துரையாடல் வெற்றி!

539 0

உமா ஓய அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமான முறையில் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

செயற்றிட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நட்டஈடு வழங்குவது உள்ளிட்ட பிரதான விடயங்கள் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டுவதற்கு ஜனாதிபதி தேவையான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உமா ஓயா பல்நாசகார செயற்றிட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டுடன் அண்மையில் பண்டாரவளை நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த செயற்றிட்டம் காரணமாக 7000 த்திற்கும் அதிகமான பொது இடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதேபோன்று, குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையும் பொது மக்களால் எதிர்கொள்ளப்படுவதால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றைய கலந்துரையாடலின் போது பல யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் ஹரின் பர்ணான்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நெருக்கடி தொடர்பில் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

Leave a comment