வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

250 0
சுவிட்சர்லாந்தில் உள்ள மாபியா குழுவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரமே வித்தியாவை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
அரச சாட்சியமாக மாறிய  சாட்சியாளர் ஒருவர் நீதிமன்றில் இன்று இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் விசாரணை மன்றின் முன்னிலையில், இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்றது.
வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்களுடன் சிறையில் இருந்த கைதி ஒருவர் அரச சாட்சியாக மாறி மன்றில் சாட்சியமளித்தார்.
மாபியா குழுவுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரம், 20 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி அந்த காணொளியை பதிவேற்றம் செய்ய வேண்டுமென்பதற்காகவே, சுவிஸ் குமார் சுவிசர்லாந்தில் இருந்து வந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம், வித்தியாவின் புகைப்படம் காண்பிக்கட்டு, அந்த குழு ஒப்புதல் வழங்கியதன் பின்னர், வித்தியாவை வன்புணர்வு செய்து படுகொலை செய்தாகவும் அந்த சாட்சி குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இருந்து அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் தப்பித்து சென்றதாகவும் அவர் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.
இந்த நிலையில், வித்தியா படுகொலையின் சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave a comment