சிவில் சட்டத்தின் கீழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை தாக்க முடியாது!

300 0

சைட்டம் பிரச்சினையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இரண்டு கொள்கைகளை கடைபிடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சைட்டம் நிறுவனத்தை பொது சொத்தாக மாற்ற தலையிடுவதாக சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். எனினும் தற்போது வேறு ஒன்றை கூறுகின்றார்.

சைட்டம் பொது சொத்தாக மாற்றப்படாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இதற்கு சம்பிக்க ரணவக்க என்ன கூறபோகிறார்?.

அதேபோல் அண்மை காலமாக நடைபெற்ற சைட்டம் எதிர்ப்பு மற்றும் அவற்றில் கலந்து கொண்டவர்ளுக்கு அரசாங்கம் பதில் வழங்கிய விதம் சரியானதல்ல.

சிவில் சட்டத்தின் கீழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை தாக்க முடியாது. குற்றவியல் சட்டத்தின் கீழ் மாத்திரமே தாக்க முடியும்.

மேலும் சைட்டம் பிரச்சினை சம்பந்தமாக எதிர்ப்பில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது தாக்கல் நடத்த தனியான குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு மருத்துவப் பீட மாணவர்களோ, பல்கலைக்கழக மாணவர்களோ பொறுப்புக் கூறவேண்டியதில்லை நெவில் பெர்னாண்டோ போன்றவர்களே இதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment