சாட்சிகளை கலைக்க தொடங்கினார் சத்தியலிங்கம்!

299 0

வட மாகாண சுகாதார அமைச்சர் மத்திய அரசின் பங்களிப்புடன் தனக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களின் சான்றாதாரங்களை அழிக்க மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார். அவ்வகையினில் அமைச்சர் தனது சகோதரன் மூலம் சுகாதார தொண்டர் நியமனத்தின் போது சுருட்டிக்கொண்ட பல மில்லியன் முறைகேடு தொடர்பான சாட்சியங்களை மறக்க மும்முரம் காட்டிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசினால் 2014ம் ஆண்டினில் பிறப்பிக்கப்பட்ட சுற்றுநிரூபமொன்றின் பிரகாரம் 180 நாட்கள் தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களிற்கு நியமனம் வழங்க அனுமதித்திருந்தது.இதனை தொடர்ந்து அமைச்சர் சத்தியலிங்கம் தனது பினாமியான சகோதரன் ஒருவர் மூலம் தனக்கு வேண்டப்பட்டவர்களிற்கு சுகாதார தொண்டர் நியமனங்களை தலா மூன்ற முதல் நாலு இலட்சம் வரை பணம் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

சுமார் 600 பேர் வரையினில் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.இந்நியமனத்தினில் பழிவாங்கப்பட்ட நிரந்தர நியமனங்கள் கிடைக்காத சுகாதார தொண்டர்கள் இது தொடர்பினில் சான்றாதாரங்களுடன் இது தொடர்பினில் முதலமைச்சரிற்க அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் இது தொடர்பினில் முதலமைச்சரும் கண்டுகொள்ளாத நிலையினில் முதலமைச்சரால் அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழுவினில் சாட்சியமளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையினில் நிரந்தர நியமனம் கிடைக்காத சுகாதார தொண்டர் நியமனதொடர்பில் ஜனாதிபதியுடன் ஓர் விசேட சந்திப்புக்கு கோரப்பட்ட அனுமதிக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய எதிர் வரும் வாரம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தமிழரசுக்கட்சி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாண சுகாதார தொட்டர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஓர் விசேட சந்திப்புக்கு எம்மால் அனுமதி கோரப்பட்ட நிலையில் தற்போது அதற்கான சந்திப்பிற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய எதிர் வரும் வாரம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமாக 860 சுகாதாரத் தொண்டர்கள் சேவை அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு பணியாற்றும் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து சலித்துப்போய் இன்று வீதியில் கிடக்கின்றனர். எனவே அவர்களிற்கான தீர்வினை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இதற்கமையவே இவர்களின் நியமனம் தொடர்பில் பிரத்தியேக ஏற்பாட்டின் மேற்கொள்ள தனியான சந்திப்பிற்கு ஜனாதிபதி யாழிற்கு வருகை தந்தபோது நேரிலும் அதன் பின்னர் எழுத்திலும் கோரயிருந்தோம்.

இவற்றின் அடிப்படையில் தற்போது குறித்த சந்திப்பிற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த தொண்டர்களின் நியமனத்திற்கான ஓர் ஏற்பாட்டின் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது குறித்த தொண்டர்களை கல்வித் தகுதியின் அடிப்படையில் நோக்காது மாற்று ஏற்பாட்டின் மூலம் உள்ளீர்க்கவே முயற்சிக்கின்றோம் .

அதற்கான ஓர் யோசணையை முன் வைத்து அதற்குரிய விசேட அனுமதியினை ஜனாதிபதி வழங்குவாராயின் எமது மாகாணத்தில் உள்ள சகல தொண்டர்களிற்கும் நிரந்தர நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறு அனைவருக்கும் நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பதவி நிரந்தரம் கிடைக்கமென்ற ஆசையினை ஊட்டி அவர்களை வாக்குமூலமளிக்காமல் தடுக்க அமைச்சர் ஆரம்பித்திருக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகின்றது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை குழப்பமாட்டேனென கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முதல் மதத்தலைவர்கள் ஈறாக உறுதியளித்துவிட்டு சத்தமின்றி சாட்சிகளை கலைக்கும் நாடகத்தை அமைச்சர் சத்தியலிங்கம் அரங்கேற்றிவருவதாக தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment