சமூக ஊடக வலையமைப்புக்களைக் குற்றம்சாட்டும் மைத்திரி!

260 0

தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலைமையப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலையமைப்புக்கள் தடையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடும்போக்காளர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இந்த சூழ்நிலையை அனைத்து மக்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள, தமிழ் , முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment