இலங்கை ஊடாக முன்னெடுக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக கனடாவை கேந்திரமாக கொண்டு புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது.
இதற்கு தேவையான போதுமான சாட்சியங்கள் தற்சமயம் கிடைத்துவருகின்றன
போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பிற நாடுகளுக்கு அனுப்பபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதாகவும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.