இலங்­கைக் கடற்­ப­ரப்­பில் மீன்­பி­டிக்க பன்­னாட்டு மீன­வர்­க­ளுக்­குத் தடை!

335 0

இலங்­கைக் கடற்­ப­ரப்­பில் பன்­னாட்டு மீன­வர்­கள் மீன் பிடித்­த­லைத் தடுத்­தல், தடை செய்­யப்­பட்ட மீனவ உப­க­ர­ணங்­க­ளைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டித்­தல் உள்­ளிட்­ட­வை­க­ளைத் தடுப்­ப­தற்கு உரிய சட்­டம் நாடா­ளு­மன்­றில் அடுத்த வாரம் இயற்­றப்­ப­டும்.

பன்­னாட்டு மீன­வர்­கள் நமது கட­லில் மீன்­பி­டித்­தால் அவர்­க­ளுக்கு 10 மில்­லி­யன் ரூபா அப­ரா­த­மும், அவர்­க­ளின் சொத்­துக்­களை அர­சு­ட­மை­யாக்­கு­வ­தும் அந்­தச் சட்­டத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு கடற்­றொ­ழில் நீரி­யல்வள அபி­வி­ருத்தி அமைச்­சர் மகிந்த அம­ர­வீர தெரி­வித்­தார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித் திட்­டத்­தின் கீழ் 142 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்கீட்­டில் கடற்­றொ­ழில் நீரில் வள அபி­வி­ருத்தி அமைச்சு, மற்­றும் இலங்கை தேசிய நீர் வாழ் உயி­ரின வளர்ப்பு அதி­கார சபை­யால் அமைக்கப்பட்ட செட்டை மீன்­குஞ்சு உற்­பத்தி நிலை­யம் மட்­டக்­க­ளப்பு தர்­ம­பு­ரத்­தில் உத்­தி­யோக பூர்­வ­மா­க நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவா் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்­கை­யில் கடல் மீன் வளர்ப்­புத்­திட்­டம் முதன் முத­லாக மட்­டக்­க­ளப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு ஒரு தட­வை­யில் 8 லட்­சத்­துக்­கும் அதி­க­மான கொடுவா மீன் குஞ்­சு­களை உற்­பத்தி செய்ய முடி­யும். இந்­தத் திட்­டத்­தி­லி­ருந்து வரு­டத்­துக்கு 3 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மான மெற்­றிக் தொன் மீனைப் பெற­லாம் என எதிர்பார்க்­கின்­றோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தை விவ­சா­யத்­து­றை­யில் மாத்­தி­ர­மின்றி மீன்­பி­டித்­து­றை­யி­லும் முன்­னேற்ற முடி­யும் என நாங்­கள் நம்­பு­கின்­றோம். 2020 ஆம் ஆண்­டில் பன்­னாட்டு வரு­மா­னத்தை இலங்­கைக்கு ஈட்­டிக்­கொ­டுக்­கும் 3 ஆவது துறை­யாக மீன­வத்­துறை காணப்­ப­டும். என்­றார்.

Leave a comment