கொலைக் குற்றம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை

384 0

ropeகொலைக் குற்றம் நிருபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
2004.02.01ஆம் திகதி கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலையை தொடர்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான பெரியசாமி அரிராமன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இராகலை பொலிசாருக்கு புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து இராகலை பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையின்போது சந்தேகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியான்டி முத்துராஜா, பழனியாண்டி ஹரிராம், பழனியாண்டி நீலமேகம், பழனியாண்டி சுப்பிரமணியம,  நீலமேகன் கமலநாதன், நீலமேகன் பாலச்சந்திரன், சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவந்துள்ளனர்.
கடந்த 12 வருடங்களாக நடைபெற்ற விசாணையின் பின்பு சாட்சிகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்றம வழங்கியுள்ளது.