சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.4,500 கோடியாக குறைந்தது

2170 0

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு இந்தியர்கள் போட்டு வைத்த பணம் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில், இந்தியர்கள் பணம் ரூ.23 ஆயிரம் கோடி இருந்தது.

ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியர்கள் பணம் வெறும் ரூ.4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்துள்ளது. சுவிஸ் தேசிய வங்கி இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இத்தகைய புள்ளி விவரத்தை அவ்வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 30 ஆண்டுகளில், கடந்த ஆண்டுதான், இந்தியர்கள் பணம் மிகவும் குறைவாக உள்ளது. அதுமட்டுமின்றி, மோடி அரசு பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில், இந்தியர்கள் பணம் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. கருப்பு பண மீட்பு நடவடிக்கைக்கு பயந்து, இந்தியர்கள் தங்கள் பணத்தை வேறு நாடுகளுக்கு மாற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a comment