1962 போரின் வரலாற்று படிப்பினைகளை இந்திய ராணுவ கற்க வேண்டும்: சீனா

816 0

எல்லைப் பகுதி ஊடுருவல் பிரச்சனை காரணமாக 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின் வரலாற்று படிப்பினைகளை இந்திய ராணுவம் கற்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலம் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய – சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியது.
ஆனால், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்தோடு, இந்திய வீரர்கள் தான் எல்லை தாண்டி வந்ததாக கூறியது.
இந்நிலையில், டாங்லாங் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ஊடுருவி சென்றதற்கான புகைப்பட ஆதாரத்தை சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு காங் வெளியிட்டார். வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இணையதளத்தில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லு காங் கூறுகையில், “சிக்கிமின் டாங்லாங் பகுதியில் உள்ள தனது படைகளை இந்திய ராணுவம் உடனடியாக திரும்ப பெற வேண்டும். அப்படி படைகளை திருப்ப பெறுவது தான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனையாக இருக்கும்.
எல்லைப் பகுதி ஊடுருவல் பிரச்சனை காரணமாக 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின் வரலாற்று பாடங்களை இந்திய ராணுவம் கற்க வேண்டும். துரதிருஷ்டவசமாக எல்லையில் ஊடுருவல் நடைபெறும் பொழுதெல்லாம் நாங்கள் புதுடெல்லி மற்றும் பீஜிங்கில் உள்ள எங்களது தூதரகத்தில் முறையிட்டுள்ளோம்” என்றார்.

Leave a comment