வீனஸ் வில்லியம்ஸ் தொடர்பில் காவற்துறையினர் விசாரணை

284 0

அமெரிக்க டென்னிஸ் வீரர் வீனஸ் வில்லியம்ஸ் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் ஏற்படுத்திய மகிழுந்து விபத்து ஒன்றில் 78 வயதான ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்லோரிடா மாநிலத்தில் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று உயிரிழந்தார்.

இந்த விபத்து வீனஸ் வில்லியம்ஸின் தவறாலேயே ஏற்பட்டதாக காவற்துறையினர் கூறுகின்ற போதும், அவரது சட்டத்தரணிகள் இதனை மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a comment