சேவைப் புறக்கணிப்ப போரட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளது.
நீண்டகாலமாக தாங்கள் முன்வைத்துவரும் கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வராத நிலையில், எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் பீ.எல். குமாரவடு இதனைத் தெரிவித்துள்ளார்.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் சட்ட மூலத்தை மறுசீரமைத்தல், நிர்வாக சேவை கொடுப்பனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டும், இன்னும் தீர்வுகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையேயே இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.