நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தமைக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இந்த கட்சிக்காக 1997ஆம் ஆண்டு தமது தந்தையையும், 1999 ஆம் ஆண்டு சகோதரனையும் இழந்துள்ளதாக தெரிவித்த அவர் சுலபமாக தன்னை கட்சியில் இருந்து வெளியேற்ற முடியாது என குறிப்பிட்டார்.