சம்பூர் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில்

265 0
இந்தியாவின் உதவியுடன், சம்பூரில் 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சக்திவளத்துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன, த ஹிந்து பத்திரிகையிடம் இதனக் கூறியுள்ளார்.
இதற்கான உடன்படிக்கை ஏற்கனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதன் சாத்தியப்பாட்டு அறிக்கையைப் பெறுவதற்கான களவேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி விரைவில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a comment