பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக 4-ந் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது, இதுவே முதல்முறை ஆகும்.
இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது, இதுவே முதல்முறை ஆகும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அழைப்பின் பேரில், மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு பெஞ்சமின் நேதன்யாகுவுடன், பரஸ்பர நலன்சார்ந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதிபர் ரிவ்லினையும் சந்திக்கிறார்.
மேலும், ஹைபா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார். டெல் அவிவ் நகரில், இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார்.