இந்திய ஜனாதிபதி பதவிக்காக 60 விண்ணப்பங்கள்

275 0

இந்திய ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரையில் 60க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பாரதியே ஜனதா கட்சியின் சார்பில் பீகாரின் முன்னாள் ஆளுனர் ராம் நாத் கோவிந்த் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

60க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தாலும், குறைந்த பட்சம் 50 முன்மொழிவாளர்கள் மற்றும் ஆமோதிப்பவர்கள் இல்லாத காரணத்தினால், மீராகுமாரி மற்றும் கோவிந்த் ஆகியோரின் விண்ணப்பங்களைத் தவிர ஏனையவை நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்று, வாக்குகள் 20ஆம் திகதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment