வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் சமாதானமான ஸ்தீரன நிலையை உருவாக்குவதற்கு தடையாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலகினுடைய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார்.
ஜோடி கறஸ்கோ முனோஸ் இற்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத்தில் சந்திப்பு நடைபெற்றது.சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் தெரிவிக்கையில்,அரசாங்கம் சமாதானம் தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஆராய்ந்திருந்தார். அரசாங்கம் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தேன்.
இருந்த போதிலும் அதில் ஒர் விடயத்தை அவருக்கு சுட்டிக்காட்டியிருந்தேன் அதாவது அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடிகளானது தான்தோன்றித்தனமானதாக மேற்கொள்ளப்பட்டதாகும். அவை தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை குறிப்பிட்டேன்.சமாதான சூழல் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் அதற்குரிய சூழல் இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய ஒர் சூழல் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக தென்னாபிரிக்காவில் அங்கு காணப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னரே மீள் இணக்க அல்லது நல்லிணக்க ஆணைக்குழு தயாரிக்கப்பட்டது.
அவ்வாறான நிலைமை இங்கு காணப்பட்டால் அவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாமும் இனைந்து செயற்படுவோம். ஆனால் வடக்கு மாகாணத்தில் அவ்வாறான ஒர் சூழல் இல்லை.இன்னமும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் உள்ளனர். பொதுமக்களது காணிகளை முழுமையாக விடுவிக்காது படையினரே வைத்துள்ளனர். இதனூடாக வருகின்ற வருமானத்தை தாமே எடுத்துக்கொள்கின்றனர்.வீடுகளை வைத்துள்ளனர் இதனால் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். மீன்பிடித்துறை வளங்கள் சுறையாடப்படுகின்றன. இத்தகைய சூழலில் எவ்வாறு சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர முடியும் என்ற எனது கருத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அத்துடன் இதுதொடர்பாக தாம் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார். என்னிடம் அவர் கேட்டிருந்தார், யாப்பிணூடாக நல்லிணக்கத்தை கொண்டுவரகூடியதாக இருக்குமா எனவும் சுயாட்சி அடிப்படையில் தீர்வை எட்டமுடியாதா எனவும் கேட்டிருந்தார்.இதற்கு நான் தெரிவித்தேன், அமையவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பாக எமது முன்மொழிவுகளை கொடுத்திருக்கின்றோம் என்பதை குறிப்பிட்டேன். அத்துடன் எவ்வாறானாலும் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள கூடிய ஆட்சி செய்ய கூடிய நிலை உருவானால் அது நன்மை பயப்பதாகவே அமையும் என தெரிவித்திருந்தேன்.எனினும் சட்டரீதியாக சமஸ்டி ஆட்சி என்பதற்கு கொடுக்கப்படும் வரையறைகளை வேறோரு விதத்தில் கொடுக்க முனைந்தால் அவை தொடர்பில் நீதிமன்றங்கள் பிறிதொரு வரையறைகளை குறிப்பிடும் என்ற பிரச்சனையும் எடுத்துகாட்டியிருந்தேன்.
அதற்கான முன்னெமாழிவுகளைக் கொடுத்திருக்கின்றோம் என்றும் சமஷ்டி அரசியல் யாப்பு தேவை என்பதை அவர்களுக்கு குறிப்பிட்டிருந்தோம். சுயாட்சி என்ற அடிப்படையில் இந்த தீர்வை எட்டமுடியாதா? என்ற கேள்வியை முன்வைத்தார்.சமஷ்டி என்பதிலும் பார்க்க சுயாட்சி என்ற அடிப்படையில் தீர்வை எட்டமுடியாதா? எதுவாக இருந்தாலும் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் யாப்பு. அற்கேற்ற விதத்தில் அதனை செய்யக்கூடியதாக இருந்தால் அது நன்மை பயக்கும்.சட்ட ரீதியாக சமஷ்டி என்ற சொல்லுக்கு கொடுக்கப்படும் வியாக்கியானங்கள் வேறு ஏதாவது ஒரு முறையில் கொடுக்க முனைந்தால், அதனை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றங்கள் பிரிதொரு வியாக்கியானங்களைக் கொடுக்க கூடும் என்ற பிரச்சினையும் எடுத்துக்கூறியதாக சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.