மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் கடும் நிலைப்பாடுகளை விடுத்து, விரைவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுக்கு வருமாறு, இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் கோரியுள்ளது.
அரசாங்கம் மற்றும் சயிட்டம் எதிர்ப்பு தரப்பினருக்கு இந்த வேண்டுகோளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.