சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவது எந்தவொரு அரசியல் அல்லது வேறு விதமான அழுத்தங்களுக்கும் உட்பட்டு அல்ல என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
பெரிய செல்வந்தர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும், வரும் காலத்திலும் இதனை அப்படியே செயற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அண்மையில், கொலன்னாவ பகுதியில் கால்வாயை பாதிக்கும் வகையில் இருந்த பல கட்டடங்களை அகற்றியதாகவும், அதேபோல், பேலியகொடை, கொலன்னாவ மற்றும் களனி ஆகிய பகுதிகளிலும் நீர்க்குழாய்களை பாதிக்கும் வகையிலுள்ள கட்டடங்களை அகற்ற நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.