இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத் திறன் நிகழ்வு -2016 இல் மாவட்ட மட்டத்தில் சிறப்பான ஆக்கத்திறனை வெளிப்படுத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் அறநெறிப் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களிற்கான நிதி உதவி வழங்குதல் ஆகிய நிகழ்வு இன்று நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியமன் ஆலய் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களையும் அறநெறிப் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களிற்கான நிதியையும் வழங்கி வைத்தார்.
இதன் போது உரையாற்றிய அவர் மாணவ சமூதாயம் எதிர்காலத்தில் ஒழுக்கம் உள்ள சமூதாயமாக இருக்கவேண்டுமானால் அறநெறி கல்வி அவசியம் என குறிப்பிட்டார்.
தற்போது இந்து மாணவர்களிடையே அறநெறி கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருவது பாராட்டதக்க ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸவரன், கல்வி அமைச்சின் முன்னால் மேலதிக செயலாளர் தில்லை நடராஜா, இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திருமதி ஹேமலோஜினி, இ.கர்ஜின், கணக்காளர் மா.கோ.காண்டீபன் ஆகியோரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.