பேஸ்புக் ஊடாக நபர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 25 வெளிநாட்டவர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியா, உகண்டா நாட்டவர்கள் அதில் உள்ளடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள், பேஸ்புக் ஊடாக தொடர்பு கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்களை தருவதாக கூறி அவர்களின் கையடக்க தொலை பேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு அஞ்சல், சுங்கம் மற்றும் காப்பாறுதி கட்டணங்கள் என பணத்தினை பெற்று கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.