ஊழியர் சேபலாப நிதியினூடாக 580 கோடி ரூபா பெப்பர்ச்சுவல் ஸ்டெசரிஸ் நிறுவனத்திற்கு இலாபம்

300 0

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் ஊழியர் சேபலாப நிதியினூடாக 580 கோடி ரூபாவை பெப்பர்ச்சுவல் ஸ்டெசரிஸ் நிறுவனம் இலாபமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில், இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது.

பிணை முறி விநியோகம் தொடர்பாக அறிக்கைப் படுத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் கோப்புகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆராயப்பட்டபோது, மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மேலதி பணிப்பாளர் வசந்த அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில், ஊழியர் சேமலாப நிதியத்தின் 100 ரூபா பிணை முறிகளை 110 ரூபா 56 சதத்துக்கு ஆரம்ப கொடுக்கல் வாங்கல் செய்தவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அந்த ஆரம்ப கொடுக்கல் வாங்கல் செய்தவரிடமிருந்து குறித்த பங்குகளை 110 ரூபா 56 சதத்துக்கு பெப்பர்ச்சுவல் ஸ்டெசரிஸ் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

இதையடுத்து, குறித்த ஆரம்ப கொடுக்கல் வாங்கல் மேற்கொண்வரால், பெப்பர்ச்சுவல் ஸ்டெரிஸ் நிறுவனத்திடமிருந்து குறித்த பங்குகள் 119 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், அந்த ஆரம்ப கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவரிடமிருந்து, 8 ரூபா 94 சதத்தை மேலதிகமாக வழங்கி, ஊழியர் சேபலாப நிதியம் குறித்த பங்குகளை கொள்வனவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பங்குகளை மீண்டும் கொள்வனவு செய்ததன் ஊடாக 216 மில்லியன் ரூபாவை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல கொடுக்கல் வாங்கல்கள் குறித்த தகவல்கள் சாட்சியாளரால், ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் அரச நிறுவனங்களின் ஊடாக மட்டும் பெப்பர்ச்சுவல் ஸ்டெசரிஸ் நிறுவனம் 6 பில்லியன் 657 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment