இலங்கை தற்போது போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் சர்வதேச கேந்திரநிலையமாக மாறியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத பரிமாற்றத்தை அடையாளம் காணல் தொடர்பான நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இது பாரிய பிரச்சினையாகும்.
இயற்கை அனர்த்தங்கள், குப்பை பிரச்சினை, முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் மாலபே தனியார் பல்கலைக்கழகம் போன்ற அன்றாட பிரச்சினைகள் குறித்து அனைவரினதும் கவனமும் செலுத்தப்படும்.
இதுபோன்ற பிரச்சினைகள் மக்கள் மனங்களில் இருந்து மறைந்துவிடும்.
எனவே, இது தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதை பலப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.