தமிழ் அரசியல் கைதிகள் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

345 0

hands of a prisoner on prison bars

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.இந்த நிலையில்,   சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கணேசன் நிமலரூபனின் நான்காவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் போராட்டம் நடத்த அரசியல் கைதிகளின் குடும்பங்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பு – வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அருட்தந்தைமாரி முத்துசத்திவேல்  தெரிவித்தார்.

தமது விடுதலை தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதாக கைதிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், ஏழு மாதங்கள் கடந்தும் இதுவரை அவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.