ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெரத்தில் தலிபான் தீவிரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ராணுவத்தினரின் பாதுகாப்புடன் சுற்றுலா மேற்கொண்டபோது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் பாதுகாப்புடன் பத்திரமாக பயணம் மேற்கொண்டபோதும் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகள் பாமியன் மற்றும் கோர் மாகாணம் வழியாக செஸ்ட்-இ-ஷெரிப் மாவட்டத்திற்குள் நுழைந்து 12 அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தில் தாக்குதல் நடத்தியதில் 6 சுற்றுலா பயணிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் டிரைவர் ஒருவரும் காயமடைந்தனர் என ஹெரட் ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலைகள் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் ஏணைய ஆயுதக் குழுக்களால் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. அவ்விடங்கள் கொலை மற்றும் கடத்தல் நடக்ககூடிய இடமாக மாறியுள்ளது. இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் பாமியன் மாகாணங்களில் உள்ள கவர்ந்திழுக்கும் இயற்கை காட்சியை காண வருகின்றனர்.