சார்க் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

330 0

201608042000018385_saarc-meet-India-Pak-barely-shake-hands-Indian-media-kept-at_SECVPFபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் இந்திய ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

சார்க் மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளை தியாகிகள் போல் புகழக் கூடாது என்றும், தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனிநபர் மற்றும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் பெயரினை நேரடியாக பயன்படுத்தாமல் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக செரீனா ஹோட்டலுக்கு  ராஜ்நாத் சிங் வருகை தந்தார். மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு வருகை தரும் உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகளை வரவேற்பதற்காக, பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலி கான் வரவேற்பு அறையில் நின்றார். ஆனால் இரு தலைவர்களும் கைகூலுக்கி கொள்வதை தவிர்த்து விட்டனர்.

சார்க் மாநாட்டு நிகழ்வுகளை படம் பிடிக்க இந்திய ஊடகங்கள் உட்பட யாறுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ராஜ்நாத் சிங்கின் உரையின் முக்கிய அம்சங்கள் மறைக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மாநாட்டை நடத்தும் நாட்டின் உள்துறை மந்திரியின் உரையை தவிர மற்றவர்களின் பேச்சுகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாதது வழக்கமான நடைமுறைதான் என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் சார்க் மாநாட்டை முடித்துக்கொண்டு ராஜ்நாத் சிங் டெல்லி திரும்பினார். ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது, ஆனால் அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.