புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்? – நாராயணசாமி

347 0

201608050759268219_Puducherry-power-to-whom-Chief-Minister-Narayanaswamy-Answer_SECVPFடெல்லியில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் இடையே ஆட்சி அதிகாரம் தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு டெல்லியில் கவர்னருக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. அவரே நிர்வாக தலைவராகவும் இருப்பார். டெல்லி மந்திரி சபையின் முடிவுகள் கவர்னரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், அமைச்சரவையின் யோசனையை கவர்னர் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் அதிகாரிகள் இடமாற்றம், அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவைகளில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. நிர்வாகத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும் கவர்னருக்கே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.டெல்லியைப் போன்றே யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் புதுச்சேரியிலும் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவுவதாக எதிர்க்கட்சிகள் நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றன.  இந்தநிலையில் டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்துகேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லிக்கும், புதுச்சேரி நிர்வாகத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. புதுவையை பொறுத்தவரை காவல்துறை, நிலம், அரசு நிர்வாகம் ஆகியவற்றில் அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் டெல்லி யூனியன் பிரதேச சட்டங்கள் வேறு, புதுவை யூனியன் பிரதேச சட்டங்கள் வேறு.

தற்போது டெல்லி ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதனை படித்துவிட்டு பின்னர் அதுபற்றி கருத்து தெரிவிக்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.புதுவை கவர்னர் கிரண் பெடியுடன் உங்களுக்கு மோதல் உள்ளதா? என்று கேட்டதற்கு எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர் பதில் அளித்தார்.