அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தென்னிலங்கை அரசாங்கமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு சமரசம் தொங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு? என வடமாகாண முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
அண்மையில், வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், தம்மை நீக்குவதற்கான திட்டங்கள் தெற்கில் இருந்தே வகுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது வடக்கு மாகாண அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் செவ்வி அளித்துள்ளார்.
அதில், உங்களை அகற்றும் சதி கொழும்பில் தீட்டப்பட்டதாக கூறியிருந்தீர்கள். எனினும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமலேயே கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளது. இந்த நிலையில், உங்களை அகற்றுவதற்கான சதி இடம்பெற்றதாக இன்னமும் நினைக்கிறீர்களா? ஏன்? என்று கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு சமரசம் தொங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு? எனப் பதிலளித்துள்ளார்.