இத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை இத்தாலி போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கைது செய்தனர்.
இத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை இத்தாலி போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கைது செய்தனர்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் வறுமை காரணமாக வடஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள்.
அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலியை தங்களது பயணத்தை கடப்பதற்கு வழியாக பயன்படுத்துகின்றனர். இதனால் இத்தாலி போலீசார் மற்றும் கப்பற்படையினர் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் – இத்தாலியை தரைவழியாக இணைக்கும் எல்லையாக இருப்பது வென்டிமிக்லியா. இங்கு இன்று திடீரென 400-க்கும் மேற்பட்டோர் பேரணியான திரண்டு பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயன்றனர்.
இவர்களை இத்தாலி போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அருகில் உள்ள ஆற்றில் குதித்து பிரான்ஸ் எல்லைக்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி அவர்களை கட்டுப்படுத்தி கைது செய்தனர்.
அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர், ‘‘பிரான்ஸ், பிரான்ஸ், இத்தாலி வேண்டாம், இத்தாலி வேண்டாம், பிரான்ஸ்க்கு செல்ல வேண்டும் என கோஷமிட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் சூடானில் இருந்து வந்தவர்கள் எனக்கருதப்படுகிறது.
ஒரு காலத்தில் பிரிட்டன் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்தோரின் காத்திருப்பு முகாமாக வென்டிமிக்லியா திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாட்டின் சட்டப்படி புலம்பெயர்ந்து வருபவர்கள், எந்த நாட்டை வந்தடைகிறார்களோ அந்த நாட்டில் அகதிகளுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டும். இதனால் இத்தாலி இந்த விஷயத்தில் சிக்கி தவித்து வருகிறது.