தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்க செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் சட்டம் நிலைநாட்டப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர ்இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் , அரசாங்கம் ஒருபோதும் இதற்காக அச்சப்படபோவதில்லை எனவும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.