சோனியா காந்தி வைத்தியசாலையில்

304 0

201608050924348186_Sonia-Gandhi-undergoes-shoulder-surgery_SECVPFஉத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
காரில் ஊர்வலமாக சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோனியா காந்திக்கு தோள்படையில் காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் சோனியா காந்தியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட சோனியா காந்தி அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் அவர் மேற்கு டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சோனியா காந்தியின் இடதுகை தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவருக்கு சுமார் 2 மணி நேரம் ஆபரேஷன் நடந்ததாக நேற்று தகவல் வெளியானது.

தோள்பட்டை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் சஞ்சய் தேசாய், பிரதீக் குப்தா ஆகியோர் சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆஸ்பத்திரியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சோனியா காந்தி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

சோனியா காந்தி இன்னும் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பார் என்றும், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.