சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அங்குள்ள பொது சொத்துக்ளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக மருத்துவப் பீட மாணவர் தலைவர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ராகமை மருத்துவப் பீடத்தை சேர்ந்த மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை அழகியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகரவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்குள் புகுந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 100 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.