பௌத்த பிக்குமார் சிலர் சமூக, கலாசார மனநிலையை அடிப்படையாக கொண்டு சிங்கள பௌத்த மதம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்ககத்தின் உபவேந்தர் என பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அடிப்படையான பௌத்த சமயத்தில் எந்த இடத்திலும் பௌத்த தர்மம் ஒரு நாட்டுக்கோ, இனத்திற்கோ, ஜாதிக்கோ உரியது என வரையறுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் மொழி மற்றும் கலாசார அடிப்படையில் விசேட அடையாளங்கள் உள்ளன. அந்த சமூக அடையாளத்திற்காக பேசுவோர், குரல் கொடுப்போர் பலர் உள்ளனர்.இவர்களில் சிங்கள மொழி பேசும் மற்றும் அந்த மொழியுடன் சம்பந்தப்பட்ட கலாசார உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பௌத்த பிக்குமார் இருப்பதை காணமுடிகிறது.
எனினும் மனிதர்களை இன, ஜாதி, குல ரீதியாக பிரிக்க கூடாது என பௌத்த தர்மம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.இதனால், பௌத்த தர்மமத்தை இனவாத போதனையாக கருதுவது பௌத்த போதனைகளுக்கு நிந்திப்பதாகும் எனவும் பெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.