புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமான அரசாங்கத்தின் நோக்கம் தாம் மற்றும் தமக்கு சார்பானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதாகும் என மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
குருணாகல் – கொக்கரெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவரை அழித்து தம்மால் நாட்டிற்கு சுதந்திரம் கொண்டுவரப்பட்டது.
இதனால் நாட்டில் அனைவரும் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் தற்போதைய அரசாங்கம், அதனை பயன்படுத்தி தமக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஏற்படுத்த அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவர முயற்சிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.