எம்பிலிபிட்டிய சாலையைச் சேர்ந்த சகல அரச பேருந்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சாலையில் பணிபுரியும் சாரதி மீது, தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான சாரதி, எம்பிலிபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
ஒன்றிணைந்த பயண அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக
எம்பிலிபிட்டிய காவற்றுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை எம்பிலிபிட்டிய காவற்றுறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.