மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயை தடியால் தாக்கி காயமேற்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபரான மகனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஊருகஸ்மங்கந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அயல்வீட்டார், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு பொலிஸார் வந்தபோது, இரத்தத்துடன் தாய் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
கால்கள் மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் இருந்த தாயை மீட்ட பொலிஸார், நோயாளர் காவு வண்டியை வரவழைத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாய் மறைத்து வைத்திருந்த பணத்தை கேட்டு தாக்குதல் மேற்கொண்ட மகன், வீட்டுக்கு பின்புறத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.