ஐக்கிய தேசியக்கட்சியுடன் மஹிந்ததரப்பினர் உடன்பாட்டு பேச்சு – மஹிந்த அமரவீர

339 0

16col-1444970253-mahinda-amaraweera234-600-720x480-720x480181735865_4009607_10022016_kaa_cmyஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள, மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
இதன்படி அந்த தரப்பினர்,  6 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், இரண்டு ராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் மூன்று பிரதியமைச்சுக்களை கோரியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்தக்கோரிக்கை, ஐக்கிய தேசியக்கட்சியிடம் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஐக்கியதேசியக்கட்சியுடன் உடன்பாட்டுக்கு செல்ல பேச்சு நடத்தியுள்ள மஹிந்த தரப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பதை குறைக்கூறுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் இந்த உடன்பாட்டு பேச்சை நடத்தியவர் யார் என்பதை தாம் பின்னர் வெளியிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த உடன்பாட்டுக்கு இணங்கவில்லை என்றும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.